Asianet News TamilAsianet News Tamil

டோல்கேட்காரர்களை அதிரவைத்த திமுகவினர்... முதல்முறையாக டோலக்கேட்டில் இலவசம்!

தமிழகத்திலிருந்து தன்னுடைய தலைவனை பார்க்க தலைநகருக்கு படையெடுத்து வந்த வாகனங்கள் டோலக்கேட்டில் இலவசமாக்கப்பட்டுள்ளது.

Toll Gate free for Karunanidhi Death

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மாலையிலேயே டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகள் மூடப்பட்டது. தமிழகத்திலிருந்து டதன்னுடைய தலைவனை பார்க்க தலைநகருக்கு படையெடுத்து வந்த வாகனங்கள் டோலக்கேட்டில் இலவசமாக்கப்பட்டுள்ளது.

அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளாக மக்களுக்காக தொண்டாற்றிய திமுக தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று இயற்கை எய்தினார். அவரது இழப்பால் ஒரு பக்கம் துடி துடித்துக்கொண்டிருக்கிறது தமிழகமே.  இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது. காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கருணாநிதியின் இறுதி சடங்கிற்கு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதியில் இருந்து தொண்டர்கள் சென்னையை நோக்கி வந்திருந்தனர்.

Toll Gate free for Karunanidhi Death

இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி உள்பட, அரசியல் கட்சி தலைவர்கள்  கண்ணீர் அஞ்சலி செலுத்தி வந்தனர். கருணாநிதியின் உடலை கடைசி முறையாக பார்ப்பதற்காக தொண்டர்களும், பொதுமக்களும் முண்டியடித்து ராஜாஜி ஹாலுக்கு வந்தனர். கருணாநிதியின் மறைவால் அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறித்தப்பட்டது. டாக்சி, ஆட்டோ போன்றவையும் இயக்கப்படவில்லை. கிட்டத்தட்ட பந்த் போன்ற ஒரு காட்சி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தது. ஆனாலும், தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் ஒரு சின்ன சம்பவம் கூட நடக்கவில்லை. 

Toll Gate free for Karunanidhi Death

இந்நிலையில்,  கட்சித் தொண்டர்கள்,  தன்னுடைய தலைவனின் முகத்தைப் பார்க்க தலைநகருக்கு வாகனங்களில் படையெடுத்து வந்தனர். கன்னியாகுமரியிலிருந்து சென்னைவரை உள்ள டோல் கேட்டில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை, பெரும்பாலும் திமுகவினரே அதிகமாக திமுக கொடியுடன் வந்ததால் வசூலிக்கப்படவில்லை, எப்போதுமே டோல்கேட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் போல காவலாளிகள் இருப்பார்கள். யாராவது யாமாற்றிவிட்டு வண்டியை எடுத்துச்சென்றால் துரத்திப் பிடித்து வெளு வெளு என வெளுப்பார்கள். அப்படிப்பட்ட டோல்கேட் காரர்கள் படையெடுத்துவந்த திமுகவினரிடம் கட்டணங்கள் கேட்கவில்லையாம். இதுவரை எப்போதுமே டோல்கேட்டில் இலவசமாக விட்டதில்லை, ஏன் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபோதும், அப்துல்கலாம் மறைந்தபோது கூட கட்டணங்கள் வசூலித்தார்கள் , அப்போதைக்கு ஜெயலலிதா முதல்வர்.

ஒரு முதல்வருக்கே இலவசமாக விடாத டோல்கேட்காரர்கள் கருணாநிதி மறைந்ததும் இலவசமாக வாகனங்களை கட்டணங்கள் இன்றி முதல்முதலாக இலவசமாக விட்டுள்ளனர். வர்தா புயல் வந்த சமயத்தில் இலவசமாக வாகனங்களை  விட்டார்கள் ஆனால், சென்னைக்கு அருகே இருக்கும் ஒரு சில டோல்கேட்டில் மட்டுமே இலவசமாக இருந்தது.  கருணாநிதியின் மறைவால் வாடியுள்ள திமுக தொண்டர்கள் எதையும் செய்யத்துணிவார்கள் என்ற பயத்தால் இப்படி கட்டணங்களின்றி வாகனங்களை விட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios