Asianet News TamilAsianet News Tamil

எம்எல்ஏ வேல்முருகன் உள்ளிட்ட 9 பேருக்கு பிடிவாரன்ட்... நீதிமன்றம் அதிரடி..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையிலான கட்சியினர் முற்றுகையிட்ட போது, அந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.

toll gate attack..Warrant for 9 people including MLA Velmurugan
Author
Kallakurichi, First Published Aug 26, 2021, 10:49 AM IST

சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகன் எம்எல்ஏ உள்பட 9 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையிலான கட்சியினர் முற்றுகையிட்ட போது, அந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.

toll gate attack..Warrant for 9 people including MLA Velmurugan

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வேல்முருகன் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

toll gate attack..Warrant for 9 people including MLA Velmurugan

இந்நிலையில் இவ்வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் சண்முகநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 5 பேர் மட்டும் ஆஜராயினர். வேல்முருகன் எம்எல்ஏ, த.வா.க மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 9 பேர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாத வேல்முருகன் உட்பட9 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios