உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் அதிமுக அரசு தடுக்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழி  கூறியுள்ளார். எம்.பி.நிதியை ஒதுக்கீடு மட்டும் தான் செய்ய முடியும், மாநில அரசு தான் அதனை செலவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல ஊர்களில் 100 நாள் வேலையை குறைத்துவிட்டார்கள் என கனிமொழி  குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு திமுக கூட்டணி உறுதியான நிலையில், விரைவில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்டம் கும்முனூர் கிராமசபை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.

கோடநாடு விவகாரம் குறித்து மு க ஸ்டாலின் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார் என்றும், இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கொலை கொள்ளை போன்ற நடவடிக்கைகளில் திமுகதான் ஈடுபடும் என்றும் திமுக ஒரு ரவுடி கட்சி என்றும் தெரிவித்தார். மேலும் எப்படிப்பட்ட ஜகஜால கில்லாடி வேலை செய்தாலும் தமிழக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை போக்க முடியாது என்றும் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.