மிகுந்த பரபரப்பான  சூழ்நிலையில்  காவிரி மேலாண்மை ஆணையத்தில் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து ஆணையத்தை முடக்க கர்நாடக அரசு சதி வேலையில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, புதுச்சேரிஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து மத்தியஅரசு கடந்த ஜூன் 1 ஆம் தேதி காவிரிமேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைப்பதை அரசிதழில்வெளியிட்ட‌து.

இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர்மசூத் ஹூசைன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் மத்திய நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் ஏ.எஸ்.கோயல் செயலாளராகவும் நிய மிக்கப்பட்டன‌ர்.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த ஆணையத்தில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமை பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண்ஆணையத்தின் ஆணையர் ஆகியோர் நிரந்தர‌ உறுப்பினராகவும், மத்திய பொதுப் பணித்துறையின் இணைச்செயலர், மத்திய வேளாண் நலத்துறை இணை செயலர் ஆகியோர் பகுதி நேர உறுப்பினராகவும் அறிவிக்கப்பட்டனர். கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில நீர்ப்பாசனத்துறை செயலர்களும் இதில் இடம்பெறுவார்கள் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆணையம் செயல்படும் விதம், அணை பராமரிப்பு, நீர் இருப்புகணக்கீடு, ஆய்வு மேற்கொள்ளும் முறை, காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய விவசாய முறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

குறிப்பாக கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பங்கீடு எவ்வாறு மேற்கொள்வது, எவ்வாறு மாதாந்திர நீர் பங்கீடு மேற்கொள்வது என்பன போன்ற முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து விவாதிப்பதற்காக பெங்களூருவில் சனிக்கிழமையன்று கர்நாடக முதலமைச்சர்ல்வர் குமாரசாமி தலைமையில்அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆணையத்தை முடக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.