மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா டாஸ்மாக் மதுபானக் கடை எண் 5410 இன்று வழக்கம் போல் செயல்பட்டது. தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கடை எண் 5410 மட்டும் செயல்பட்டது. அதில் குடிமகன்கள் சாரைசாரையாக குவிந்ததற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி,, பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சி களுக்கும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 

மொத்தம் இரண்டரை கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,800 இடங்கள் பதட்டமானவை என போலீசார் கண்டறிந்துள்ளனர். இன்று காலை முதல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் போன்ற சச்சரவுகள் எழுந்தாலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் 3 மணி நிலவரப்படி 31.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா டாஸ்மாக் மதுபானக் கடை எண் 5410 இன்று வழக்கம் போல் செயல்பட்டது. 

"

தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று பகுதி 5410 கடையில் கூட்டம் கூட்டமாக குடிமகன்கள் சரக்கு வாங்க குவிந்தனர். இது குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயற்சித்தும் முடியவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் கூடியதால் நிலையூர் டாஸ்மாக் கடையில் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது.