கடின உழைப்பால நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று 3 வது இடத்திற்கு பாஜக வந்துள்ளது என்றும் பாஜகவை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தாயாராகிவிட்டனர் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கடின உழைப்பால நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று 3 வது இடத்திற்கு பாஜக வந்துள்ளது என்றும் பாஜகவை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தாயாராகிவிட்டனர் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் கடந்த பிப்.,19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நகர்ப்புற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது. தற்போது பெரும்பாலான வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

நகர்ப்புற தேர்தலில் 21 மாநகராட்சிகளை திமுக கைபற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.மேலும் 132 நகராட்சிகள்,435 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து களம் கண்ட பாஜக பெரும்பாலான இடங்களில் அதிக வாக்குகள் பெற்று 3 ஆவது கட்சியாக இடம் பிடித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டு பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். 

அதே போல் நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளிலும் ஒரு சில வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக நாதக, மநீம கட்சிகள் ஒரு இடங்களிலும் வென்றி பெறாத நிலையில் பாஜகவின் இந்த வாக்கு சதவீதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.இந்நிலையில் பாஜகவினர் தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் டிவிட்டரில் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு எனும் ஹேஷ்டேக் வைரலாக்கி வருகின்றனர். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, இதுவரை எங்கள் கட்சி சார்பில் பொது பிரதிநிதிகள் இல்லாத இடங்களில் தமிழக பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக அதிகாரப்பூர்வ 3 வது கட்சி நாங்கள் தான் என்று அவர் கூறினார். மேலும் துணிச்சலுடன் களப்பணியாற்றிய தொண்டர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான இந்த வெற்றியானது, பிரதமர் நரேந்திர மோடி மீது தழிழ்நாட்டு மக்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.மேலும் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாமற்றும் பாஜக தலைமைக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். ஒரு தேர்தலில் அதிமுக பின்தங்கியதற்காககுறைத்து மதிப்பிட முடியாது என்று அவர் கூறினார்.

Scroll to load tweet…