Asianet News TamilAsianet News Tamil

MK Stalin : நல்ல செய்தி..அதிரடி..! மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி..!

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 2021 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 

TN Govt Announcement
Author
Tamil Nadu, First Published Dec 3, 2021, 9:47 PM IST

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 2021 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்களில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நிலுவையில் அபராததொகை மற்றும் இதர செலவினங்களை தவிர்த்து, அசல் தொகையான 2 ஆயிரத்து 459 கோடியே 57 லட்சம்  ரூபாயும், வட்டி தொகையான 215 கோடியே 7 லட்சம் ரூபாயும் என மொத்தம்  2 ஆயிரத்து 674 கோடியே 64 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தபடி, இப்போது அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் முதல்கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ,  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், பேசிய இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு முறையாக செயல்படவில்லை. அவர்களுக்கு தேவையான கடனை வழங்கவில்லை. வழங்கிய கடனும் முறையாக தொழில் வளர்ச்சிக்கு பயன்படவில்லை. எனவே திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழு சீரமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios