அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசனை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அவரும் தன்னுடைய பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் விசாரணை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 பக்க கடிததத்தை தமிழக அரசுக்கு எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கடிதத்தில், துணைவேந்தர் சூரப்பா அப்பழுக்கற்றவர் என்றும் துணைவேந்தர் பொறுப்பில் அவர் நேர்மையாகவும் திறமையாகவும் செயலாற்றி வருவதாகவும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சூரப்பா மீது தொடங்கப்பட்டிருக்கும் விசாரணைக்கு இடைக்காலத் தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.