காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போரட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து வலுத்து வரும் போராட்டத்தால்,மத்திய அரசின் கவனம்  தமிழகம் மீது திரும்பி உள்ளது

மேலும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, நாளை காலை 6  மணி முதல் மாலை 6  மணி வரை மறுத்துக் கடைகள் அடைக்கப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது

மேலும் கோயம்பேடு மார்க்கெட்  நாளை  மூடப்படும் எனவும்   தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி,தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து  வருவதால், அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு கி௯லம்பி உள்ளது .

இந்நிலையில், அவசர அழைப்பு காரணமாக தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித், தற்போது டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம் மிகவும் முக்கியத்துவம்  வாய்ந்ததாக பார்க்கப் படுகிறது.

இதற்கு முன்னதாக தலைமை செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய புள்ளிகள் நேற்று ஆளுநரை சந்தித்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.