தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழக அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவிகித போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அறவிப்பை தமிழக நிதித் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

ஆண்டு தேறும் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து வருகிறது, அந்த வகையில் இந்தாண்டிற்கான போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. போனஸ் பெறுவதற்கான  ஊதிய உச்சவரம்பு  7 ஆயிரமாக இருந்த நிலையில் அது 21 ஆயிரமாக  உயர்த்தப்பட்டுள்ளது. யாரெல்லாம் 21 ஆயிரம் வரை ஊதியம் பெறுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் போனஸ் வழங்கப்படுகிறது.  இது தொடர்பாக தமிழ நிதித் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அதாவது,

 

மாநில போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பால் உற்பத்தியாளர்கள் முகமை, தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் கழகம், தேயிலை தோட்டக் கழகம், அரசு ரப்பர் தோட்டக் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், பூம்புகார் கப்பல் கழகம்  உள்ளிட்ட பொதுத் துறை ஊழியர்கள் போனஸ் பெற தகுதியானர்கள் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அதற்கான குரூப் C மற்றும் குரூப் D பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவிகித போனஸ்வுடன் ஊக்கத் தொகையும் சேர்த்து 10 சதவிகித போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த தொகை வரும் 30-ஆம் தேதிக்குள் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்  ஒவ்வொரு துறைக்கும்  போனஸ் தொடர்பான உத்தரவுகள் அந்தத் துறையிலிருந்து  தனித்தனியாக வெளியிடப்படும் என்றும் நிதித்துறை செயலாளர் அதில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அரசு பொதுத் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.