பொதுமக்கள்‌ மற்றும்‌ வழக்கறிஞர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு உச்சநீதிமன்றத்தின்‌ ஒரு கிளையினை சென்னையில்‌ அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். நீதிபதிகள்‌ நியமனத்தில்‌ சமூகநீதியும்‌ கருத்தில்‌ கொள்ளப்பட வேண்டுமெனவும் தமிழ்‌ மொழி உயர்நீதிமன்றத்தில்‌ வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.  

பொதுமக்கள்‌ மற்றும்‌ வழக்கறிஞர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு உச்சநீதிமன்றத்தின்‌ ஒரு கிளையினை சென்னையில்‌ அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். நீதிபதிகள்‌ நியமனத்தில்‌ சமூகநீதியும்‌ கருத்தில்‌ கொள்ளப்பட வேண்டுமெனவும் தமிழ்‌ மொழி உயர்நீதிமன்றத்தில்‌ வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். 

சென்னை உயர்நீதிமன்ற விழாவில் கலந்துக்கொண்ட பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டத்தின்‌ ஆட்சியை, சமூகநிதியின்‌ ஆட்சியை, நீதிநெறிமுறைகளையும்‌, விதிமுறைகளையும்‌ முறையாகப்‌ பின்பற்றும்‌ ஆட்சியை வழங்க வேண்டும்‌ என்றஉறுதியோடு, தமிழ்நாட்டில்‌ நல்லாட்சியை வழங்கிக்‌ கொண்டிருப்பதாக கூறினார். மேலும் அத்தகைய வழிமுறைகள் தான் எந்நாளும்‌ எங்களை வழிநடத்தும்‌ என்பதை நான்‌ இந்த நேரத்தில்‌ தெரிவித்துக்‌ கொள்வதாகவும் உச்சநீதிமன்றத்தின்‌ தலைமை நீதியரசர்‌ ‌தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது ,பெருமைக்குரிய வகையில்‌ அமைந்திருப்பதாகவும் பேசினார். 

நாடாளுமன்றம்‌, சட்டமன்றம்‌, நீதிமன்றம்‌ ஆகிய மூன்றும்‌ மக்கள்‌ மன்றத்தின்‌ விருப்பங்களை, உணர்வுகளைப்‌ பிரதிபலிக்கக்கூடிய மன்றங்களாக செயல்பட வேண்டும்‌. நாகரிக சமுதாயத்தின்‌ முன்னேற்றத்திற்கும்‌, மறுமலர்ச்சிக்கும்‌, மக்களின்‌ பாதுகாப்பிற்கும்‌, அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும்‌, சுதந்திரமாக செயல்படும்‌ நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசும்‌ செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும்‌ விரைவில்‌ நீதி கிடைப்பதற்குத்‌ தேவையான அனைத்து வசதிகளையும்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ இந்த அரசு செய்து வருகிறது என்றார்.

நீதித்துறையின்‌ உயிரோட்டமாக விளங்கும்‌ வழக்கறிஞர்களின்‌ நலன்‌ காப்பதிலும்‌ இந்த அரசு கவனம்‌ செலுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின்‌ வாயிலாக, வழக்கறிஞர்களின்‌ கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள்‌ நல
நிதி மூலம்‌ வழங்கப்படும்‌ சேம நல நிதியானது ரூபாய்‌ 7 இலட்சத்திலிருந்து 10 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்‌ என்பதை நான்‌ மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. கொரோனா பெருந்தொற்றால்‌ உயிரிழந்த சுமார்‌ 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 கோடி ரூபாய்‌ தொகையினை மாநில அரசு விரைவில்‌ வழங்கும்‌.

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையின்‌ முக்கிய பகுதியில்‌ நீதித்துறையின்‌ உட்கட்டமைப்புத்‌ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ வகையில்‌ பல்வேறு நீதிமன்றங்களை அமைக்கும்‌ வண்ணம்‌ கடந்த 20- 4- 2022 அன்று 4.24 ஏக்கர்‌ நிலம்‌ நீதித்துறைக்கு இந்த அரசு வழங்கி உத்திரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற, உயர்‌ நீதிமன்ற நீதிபதிகள்‌ நியமனத்தில்‌ சமூகநீதியும்‌ கருத்தில்‌ கொள்ளப்படவேண்டும்‌. தமிழ்‌ மொழி உயர்நீதிமன்றத்தில்‌ வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்‌. பொதுமக்கள்‌ மற்றும்‌ வழக்கறிஞர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு உச்சநீதிமன்றத்தின்‌ ஒரு கிளையினை சென்னையில்‌ அமைக்க வேண்டும்‌, ஆகிய மூன்று கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நான் வைப்பதாக முதலமைச்சர் பேசினார்.