டெல்லியில் சந்தித்த அந்த 3 பேர்.. அதிமுகவுக்கு டஃப் கொடுத்த ஸ்டாலின் - திமுக Vs அதிமுக தொடரும் மோதல்
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்கினார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். புதிய துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ளதற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள துணை குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. பிறகு அதனைத் தொடர்ந்து 11.30 மணிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், ‘குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரையும் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இருவரும் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்துப் பேசினோம்.
மேலும் செய்திகளுக்கு..“என்னை சந்திக்க வராதீர்கள்..எம்ஜிஆர் பாடல் !” சசிகலா திடீர் உத்தரவு - தொண்டர்கள் ஷாக்
இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்குப் பிரதமரைச் சந்திக்கவுள்ளேன். செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவிக்க உள்ளேன். மேலும் பிரதமரைச் சந்திக்கும் போது நீட் தேர்வு , புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை உள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கிய நிகழ்வுகள் குறித்த புத்தகத்தையும், தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானியங்களையும் நெல் வகைகளையும் பிரதமருக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார் என்றும், நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே டெல்லி சென்ற அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்காத பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்