Asianet News TamilAsianet News Tamil

காயத்ரி ரகுராமின் ராஜினாமாவை ஏற்றார் அண்ணாமலை... அறிக்கை வெளியிட்டது தமிழக பாஜக தலைமை!!

காயத்ரி ரகுராம் ராஜினாமாவை ஏற்று அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைமை தெரிவித்துள்ளது. 

tn bjp issued a statement that annamalai accepted gayatri raghurams resignation
Author
First Published Jan 13, 2023, 11:38 PM IST

காயத்ரி ரகுராம் ராஜினாமாவை ஏற்று அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைமை தெரிவித்துள்ளது. முன்னதாக பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். மேலும் அவரது டிவிட்டர் பதிவில், நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு… ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருமா உள்ளிட்ட விசிகவினர் கைது!!

அதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் ராஜினாமாவை ஏற்று அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இதுக்குறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த காயத்ரி ரகுராம், தனது சுய விருப்பத்தின் பெயரில் விலகுவதாக சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜக தொண்டனாக கூட இருக்கலாம் ஆனால் ஆர் எஸ் எஸ் தொண்டனாக மட்டும் இருக்கக் கூடாது..! திருமாவளவன் ஆவேசம்

கட்சியிலிருந்து அத்துடன் மாநில அமைப்பு பொதுச் செயலாளருக்கு வாட்ஸ் அப்பில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று செய்தியும் அனுப்பி இருந்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலின்படி காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அவரது எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios