திமுக கவுன்சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்... கண்டனம் தெரிவித்து இன்று தமிழக பாஜக போராட்டம்!!

திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழக பாஜக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

tn bjp announced protests today to condemn soldier beaten to death by dmk councillor

திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழக பாஜக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது சகோதரர் பிரபு. இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன். இதில் குருசூர்யமூர்த்தி, சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார். இதுகுறித்து சின்னசாமி கேட்ட போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் மேலும் சிலருடன் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !

tn bjp announced protests today to condemn soldier beaten to death by dmk councillor

அப்போது, சின்னசாமி தரப்பினர், தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் பிரபாகரன், அவரது சகோதரர் பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், வேடியப்பன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழக பாஜக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பூரண மதுவிலக்குனு நாங்க எப்போ வாக்குறுதி கொடுத்தோம்? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு கருத்து!!

tn bjp announced protests today to condemn soldier beaten to death by dmk councillor

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், திமுக கவுன்சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக பாஜகவின் முன்னாள் ராணுவவீரர்கள் பிரிவினர், ராணுவ பேட்ஜ் மற்றும் தொப்பி அணிந்து, நமது ராணுவத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவார்கள். தமிழக பாஜக சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், இன்று போராட்டம் நடத்துவார்கள். மேலும் கட்சியின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கேணல் ராமன், பிரபுவுக்கு அஞ்சலி செலுத்துகிறார். ராணுவ வீரர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத மோசமான திமுக ஆட்சிக்கு எதிராக, அடுத்த சில நாட்களில் போர் நினைவிடத்தில் நடத்தப்பட உள்ள போராட்டத்தில் இணைய, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களையும் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios