அய்யோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு அடியில் டைம் கேப்சூல் வைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணி முறைப்படி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. அதேபோல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்கு உத்திரப்பிரதேச மாநில அரசு நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை உருவாக்கியது. 

இந்த அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ராமர் கோவில் மற்றும் ராமஜென்ம  பூமி வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அடியில் சுமார் 2,000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் அதாவது  ராம ஜென்மபூமி  தொடர்பான வரலாறு மற்றும் உண்மைகளை உள்ளடக்கிய ஒரு கேப்சூல் வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது, அதாவது ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் அந்த கேப்சூல் வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில்  ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்று அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ராமஜென்மபூமி,  தீர்த்த சேத்திரம் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய்,  தற்போது பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என கூறியுள்ளார். மேலும் ராமர் கோயில் கட்டுமான இடத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி டைம்ஸ் கேபிள் வைக்கப்பட இருப்பதாக வெளியாகும் அனைத்து செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை, அதுபோன்ற எந்த தகவலையும் நம்ப வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.