இதுவரை 2000 பேரை காவு வாங்கிய கொரானா...!! உயிர் பயத்தில் நடுநடுங்கி அணுவணுவாய் மடியும் சீனா...!!
இந்நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா , சீனா , ஜப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது . இது சார்ஸ் நோயால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை விஞ்சும் என கணிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி மக்களை பலிவாங்கி வருகிறது . கொரோனா வைரஸ் சீனாவில் முற்றிலுமாக முடங்கியுள்ளது . மக்கள் உயிர் பயத்தில் நடுநடுங்கி வருகின்றனர் . இது சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா , ஆஸ்திரேலியா , பாங்காங், சிங்கப்பூர், உள்ளிட்ட 23 நாடுகளுக்கு மேல் பரவி சர்வதேச உயிர் கொல்லியாக மாறியுள்ளது .
இதுவரையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாததால் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது , இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துவருகிறது. குறைந்தது நாளொன்றுக்கு 100 முதல் 150 பேர் உயிரிழக்கின்றனர், நேற்று ஒரே நாளில் இந்த வைரசுக்கு 136 பேர் உயிரிழந்தனர் , அதிகபட்சமாக ஹூபேய் மாகாணத்தில் 132 பேர் உயிரிழந்தனர் , இதன் மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 2004 ஆக உயர்ந்துள்ளது என சினாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வைரசுக்கு ஒட்டு மொத்தமாக சுமார் 74 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் , நேற்று மட்டும் 1849 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் சிகிச்சை பெறுபவர்களில் சுமார் 136 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது . சுமார் 14 ஆயிரத்து 927 பேர் மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள் என்று தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா , ஜப்பான் , ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .