கொஞ்சம் கூட அடங்காத துரைமுருகன்.. முதல்வர் ஸ்டாலின் குறித்து இழிவு பேச்சு.. தூக்கி உள்ளே வைத்தது போலீஸ்.
இந்தப் புகாரில் சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் பத்மநாபபுரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் தீனதயாளன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்,
தமிழக முதலமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் மீண்டும் யூடியூபர் சாட்டை முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, முதல்வர் மற்றும் தமிழக அரசை அவதூறாக பேசிய தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாஜகவுக்கு இணையாக தொடர்ந்து திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் மேடைதோறும் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் நாம் தமிழர் கட்சி பெயரில் சமூக வலைதளத்தில் பலரும் முதல்வர் ஸ்டாலினை மிக மோசமான வார்த்தைகளால் இழிவுபடுத்திவருகின்றனர்.
இதையும் படியுங்கள்: அடி தூள்.. அதிமுக அவைத்தலைவர் இவர்தானா.?? இன்று ஓபிஎஸ், இபிஎஸ் முக்கிய முடிவு.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை சட்டவிரோதமாக உடைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதை கண்டித்து, தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அந்தக் கூட்ட மேடையில் பேசிய சாட்டை யூடியூப்பர் துரைமுருகன், தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடித்து, கேரளா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் துறைமுகம் அமைக்க தமிழகத்தின் மலைகள் உடைக்கப்படுகிறது, ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன் அங்கு முதல்வராக இருக்கிறான் ஆனால் இங்கு அப்படி இல்லை, என மிக மோசமான வார்த்தைகளால் சாட்டை துரைமுருகன் பேசினார்.
இதையும் படியுங்கள்: அடகடவுளே.. இந்த தக்காளிக்கு வந்த வாழ்வை பாருங்க ..? ஒரு கிலே 80 ரூபாய்க்கு விற்பணை..
இந்தப் புகாரில் சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் பத்மநாபபுரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் தீனதயாளன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார், அவரை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அப்போது உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது அவதூறு, கலவரத்தை தூண்டுதல் என்பன உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சியில் கார் பழுது நீக்கும் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியில் வந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை அவதூற பேசிய வழக்கில் கைதாகி ஜாமினில் இந்த நிலையில் அவர் மீண்டும் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.