அடகடவுளே.. இந்த தக்காளிக்கு வந்த வாழ்வை பாருங்க ..? ஒரு கிலே 80 ரூபாய்க்கு விற்பணை..

விளைச்சல் பகுதிகளில் பருவமழை அதிகமாக பெய்து வருவதால் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது, ஒரு நாளைக்கு 70 லிருந்து 80 லாரிகள் வரை தக்காளி கோயம்பேடு காய்கறி அங்காடி வருவது வழக்கம்,

Oh my God .. look at the life that came with this tomato ..? Selling for 80 rupees a kg.

கடந்த வாரம் வரை 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு கொண்டிருந்த தக்காளி விலை  பல்வேறு காரணங்களால் 1 கிலே 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் இந்த விலை ஏற்றம் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என தக்காளி வியாபாரிகள் அதிர்ச்சிதெரிவித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆங்காங்கே குரல் எடுத்து வருகிறது. 

Oh my God .. look at the life that came with this tomato ..? Selling for 80 rupees a kg.

இதையும் படியுங்கள்:  சவால் விடுத்த எச்.ராஜா எங்கிருந்தாலும் முன்னே வரவும்... பங்கம் செய்து பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு.

காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விளைச்சல் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், பெருமளவில் பயிர்கள் நாசம் அடைந்து வருவதால் கோயம்பேடு  மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக தக்காளி வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக  300 ரூபாய்க்கு விற்கப்பட்டு கொண்டிருந்த தக்காளி கூடை தற்போது 750 லிருந்து 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது அதேபோல் மொத்தவிலை அங்காடியில் கிலோ தக்காளி ரூபாய் 75 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல வெங்காயம் உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து காய்கறிகளுமே கணிசமான அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. 

Oh my God .. look at the life that came with this tomato ..? Selling for 80 rupees a kg.

இதையும் படியுங்கள்: சில அர்ச்சகர்களை முக்கிய திருவிழாக்களில் மட்டும் காணமுடிகிறது.இது மாறவேண்டும். அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை.

மேலும், இது குறித்து தெரிவித்துள்ள கோயம்பேடு தக்காளி மற்றும் காய்கறி வியாபாரிகள், விளைச்சல் பகுதிகளில் பருவமழை அதிகமாக பெய்து வருவதால் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது, ஒரு நாளைக்கு 70 லிருந்து 80 லாரிகள் வரை தக்காளி கோயம்பேடு காய்கறி அங்காடி வருவது வழக்கம், ஆனால் கடந்த மூன்று நாட்களாக அதனுடைய எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இதுவே விலை ஏற்றத்திற்கு காரணம் என்றும், இதே நிலை நீடித்தால் ஒரு மாதத்திற்கு விலை ஏற்றம் தொடரும், இதை தடுக்க வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை கொண்டு வரும் பட்சத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும், மொத்த விலை அங்காடிகளில் அதிக விலைக்கு தக்காளி விற்கப்படுவதால் சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 90 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios