சவால் விடுத்த எச்.ராஜா எங்கிருந்தாலும் முன்னே வரவும்... பங்கம் செய்து பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு.
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் எத்தனை தங்கச் சிலைகள் உள்ளது என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், சிலைகளின் பாதுகாப்பு காரணமாக தங்கத்தாலான சிலைகளின் எண்ணிக்கையை கூறமுடியாது என்றார்,
குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்த நிலம் இன்னும் நான்கு வார காலத்திற்குள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளது, குயின்ஸ்லாந்து பற்றி சவால்விட்ட அரசியல் கட்சி பிரமுகர் இப்போது என்ன சொல்ல போகிறார் என எச். ராஜாவை அமைச்சர் சேகர்பாபு சாடினார். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள பாப்பா சத்திரம் என்ற ஊரில் காசிவிஸ்வநாதர்க்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை அமைச்சர் சேகர்பாபு 24 மணிநேரத்தில் மீட்டால் இந்து அறநிலைத்துறை பற்றி இனி பேச மாட்டேன் என்று எச். ராஜா அமைச்சருக்கு சவால் விடுத்திருந்த நிலையில், இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு எச். ராஜாவுக்கு இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்க.. பிச்சு உதறப்போகுதாம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோயில்கள் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். சென்னை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1206 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் திருப்பணி, திருத்தேர், திருக்களம், மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். திருக்கோயில் பணியாளர்கள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளின் வாயிலாக, கோயில்களில் நிலவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட வாரியாக கோயில்களின் தற்போதைய நிலை மற்றும் தேவை குறித்த தரவுகள் சேமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: சில அர்ச்சகர்களை முக்கிய திருவிழாக்களில் மட்டும் காணமுடிகிறது.இது மாறவேண்டும். அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை.
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் எத்தனை தங்கச் சிலைகள் உள்ளது என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், சிலைகளின் பாதுகாப்பு காரணமாக தங்கத்தாலான சிலைகளின் எண்ணிக்கையை கூறமுடியாது என்றார், நிருபர்களுக்கு தேவை என்றால் குறிப்பிட்ட கோயில்களில் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார். அதேபோல் குயின்ஸ்லேண்ட் எப்போது கைப்பற்றப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இது குறித்து அரசியல் பிரமுகர் ஒருவர் சவால் விடுத்திருந்தார், தற்போது இந்து சமய அறநிலைத்துறை குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த நிலத்தை நான்கு வாரங்களுக்குள் கைப்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது அந்த அரசியல் பிரமுகர் என்ன சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பிய அமைச்சர் சேகர் பாபு, திராவிட முன்னேற்றக் கழக அரசு சொல்வதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும் என்றார். அதேபோல் கோவையில் கோயில் நிலங்களை PSG கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்து பயன்படுத்துவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனடியாக அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.