Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 4 நாட்களுக்கு இந்த இடங்களில் இடி, மின்னல் மழை.. 17 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

25.04.2021 & 26.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

Thunder and lightning showers at these places for the next 4 days... Weather Report.
Author
Chennai, First Published Apr 24, 2021, 1:28 PM IST

மகாராஷ்டிரா  முதல் தென் தமிழக கடலோர பகுதிவரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை )  வளிமண்டல சுழற்சி காரணமாக 
24.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,   வேலூர், விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர் அரியலூர் பெரம்பலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

Thunder and lightning showers at these places for the next 4 days... Weather Report.

25.04.2021 & 26.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
27.04.2021 & 28.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். 

Thunder and lightning showers at these places for the next 4 days... Weather Report.

சென்னையை பொறுத்தவரை அடுத்த மணி 24 நேரத்திற்கு  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 
அடுத்த மணி 48 நேரத்திற்கு  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால்  பிற்பகல் முதல் காலை வரை  வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), பென்னாகரம் (தர்மபுரி), தர்மபுரி PTO (தர்மபுரி) 6 சென்டிமீட்டர் மழையும், ராசிபுரம் (நாமக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 5 சென்டிமீட்டர் மழையும், நடுவட்டம் (நீலகிரி ), எருமைப்பட்டி (நாமக்கல்) 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios