கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருக்கிறது துக்ளக், ஆனால் அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் & ஆதரவாளர்கள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் சைலண்ட்டாகவே இருக்கின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனன் தோல்வியடைந்ததை அடுத்து , அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து வந்த தினகரன் ஆதரவாளர்கள் திடீரென்று நீக்கப்பட்டனர்.

இது தொடர்பாக துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பாஜக பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி, ”இந்த பலவீனமான நபர்கள், ஆறு மாதம் கழித்துதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஆண்மையற்ற தலைவர்கள் என ட்வீட் போட்டதற்கு அதிமுக தரப்பில் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தது. அதிலும் அமைச்சர் ஜெயக்குமார் தில்லாக ”ஆடிட்டர் குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேசக்கற்றுக்கொள்ள வேண்டும், குருமூர்த்திக்குதான் ஆண்மை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். அவர் ஒன்றும் எங்களை வழிநடத்தவில்லை. படித்த முட்டாளாக இருக்கிறார். அவர் மீது வழக்கு தொடரப்படும்,” என்றார். இதனைத் தொடர்ந்து சைலண்ட்டாக இருந்த அவர், இன்று வெளிவந்த துக்ளக் இதழில் அதிமுக மத்திய அமைச்சரவைக்கு டெல்லியில் சென்று பிச்சையெடுப்பதாக கேலிச்சித்திரம் வரைந்து தாக்கியுள்ளார். 

இந்த நிலையில் நேற்று வெளிவந்த துக்ளக் இதழின் 9 ஆம் பக்கத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் கேலிச்சித்திரம் அதிமுகவினரை மட்டுமல்ல தமிழகத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருக்கிறது துக்ளக்.

அதாவது மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் நேரடியாக சொல்லியிருக்கிறது துக்ளக்.

தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டி ஓ. பன்னீர்செல்வம் டெல்லி,ஹரித்துவார் சாமியார் என்று பல்வேறு நபர்கள் மூலம் பாஜகவிடம் பேசி வருகிறார். இது விஷயமாக குருமூர்த்தியுடன் கூட பன்னீர் பேசி வருவதாக அதிமுகவின் பன்னீர் ஆதரவாளர்களே சொல்கிறார்கள். இந்நிலையில் அதிமுகவை பிச்சைக்காரர்களாக சித்திரித்து துக்ளக் வெளியிட்ட துக்ளக் அட்டைப் படத்தைப் பார்த்து  கொந்தளிக்காமல் சைலண்ட்டாகவே இருக்கிறது ஓபிஎஸ் குரூப் & கோ!!