தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி முதல் முதலாக அமைத்து இருந்தது. காங்கிரஸ் சார்பில் பி.டி.ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் ஆகியோர் முதலமைச்சராக பதவி வகித்தனர்.

இதற்கிடையில், 1949ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறிய சி.என்.அண்ணாதுரை, திமுக என்ற அமைப்பை தொடங்கினார். சுமார் 20 ஆண்டுகளாக தங்களது அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினர்.

இதில் நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர், கருணாநிதி உள்பட பலருக்கும் பங்கு உள்ளது. இதைதொடர்ந்து 1969ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திமுக போட்டியிட்டது. அதில், பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதன்பின்னர், இதுவரை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் முதலமைச்சராக பதவியேற்ற சி.என்.அண்ணாதுரை, உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, தற்காலிக முதல்வராக நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின்னர், 1969 முதல் 1976ம் ஆணடு வரை கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். ஒரே ஆட்சி காலமான 5 ஆண்டுகளில், 3 பேர் முதலமைச்சராக பதவி வகித்தனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் சில நாட்களில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுகவில் இரு அணிகள் உருவானது. இதனால், அதிமுகவில் முதலமைச்சர் யார் என தெரியாமல் கடும் குழப்பம் நிலவி வந்தது.

இதுதொடர்பாக சசிகலா தரப்பினர், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவரனருக்கு வலியுறுத்தினர். அதன்பேரில் இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி, புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

1969 - சி.என்.அண்ணாதுரை

1969 - விஆர்.நெடுஞ்செழியன்

1969 - 1976 மு.கருணாநிதி

2016 - ஜெ.ஜெயலலிதா

2016 - ஓ.பன்னீர்செல்வம்

2017 - எடப்பாடி பழனிச்சாமி