Asianet News TamilAsianet News Tamil

2021ல் பாஸானவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்... தனியார் வங்கி அதிரடி அறிவிப்பு..!

அந்த விளம்பரம், கொரோனா காலத்தில் தேர்வு இல்லாமல் பாஸ் ஆகிய பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலம் சறுக்கல்தான் என நிரூபித்து இருக்கிறது. 

Those who have passed in 2021 are not eligible to apply for the job ... Private Bank Action Notice
Author
Tamil Nadu, First Published Aug 4, 2021, 12:19 PM IST

கொரோனா காலத்தில் தேர்வு நடத்தாமல் கல்லூரியில் பாஸானவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 

கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்வு இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இது மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக சந்தோஷத்தை கொடுத்தாலும் அவர்களது எதிர்கால வாழ்க்கை குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது தனியார் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு விளம்பரம். Those who have passed in 2021 are not eligible to apply for the job ... Private Bank Action Notice

அந்த விளம்பரம், கொரோனா காலத்தில் தேர்வு இல்லாமல் பாஸ் ஆகிய பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலம் சறுக்கல்தான் என நிரூபித்து இருக்கிறது. 

அந்த வேலைவாய்ப்பு வ்பிளம்பரத்தில் 28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், மதுரை , ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய ஊர்களில் பணியாற்ற வாய்ப்பு என்றும் அவர்கள் வங்கியில் ஊழியர்களாக  கருதப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.Those who have passed in 2021 are not eligible to apply for the job ... Private Bank Action Notice

ஆனால், 2021ல் பாஸானவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது கொரோனா காலத்தில் படித்து பாஸானவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இதனால் இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதே நிலைப்பாட்டை மற்ற நிறுவனங்களும் கையாண்டால் 2021ல் பாஸானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios