அமெரிக்காவில் மோடி நிகழ்ச்சிக்கு கூடியவர்கள் ₹200,பிரியாணி. குவாட்டர் கொடுக்காமல் கூடிய மூளையுள்ளவர் கூட்டம் என எஸ்.வி.சேகர் கருத்து கூறியுள்ளார். 

ஹூஸ்டனில் நேற்று, நடந்த ஹவுடி மோடி திட்டத்தின் வெற்றியை முழு உலகம் முழுக்க சிலாகித்து வருகிறது. பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்பும் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இதனை பாஜக பெருமையாக கூறி வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  ‘’நம் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் உயர்ந்த உன்னத நேரத்தின் காரணம் நம் உன்னதத் தலைவன் மோடி அவர்கள். ₹200,பிரியாணி. குவாட்டர் கொடுக்காமல் கூடிய மூளையுள்ளவர் கூட்டம். 

பணம் கொடுத்து மோடியின் பேச்சை கேட்க வரவில்லை. தமிழகத்தில் மோடியை விமர்சிப்பவர்கள் அவரின் கால் தூசுக்கு  ஈடாக மாட்டார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ‘’மானமுள்ள தமிழன் இந்த நிகழ்விற்கு போகமாட்டான் அங்கே போனவன் எல்லாம் மூளை கெட்ட இந்திகாரப் பயபபுள்ளைங்க அதனாலதான் இந்தியில் பேசுகிறார்’’என கருத்துக் கூறி வருகின்றனர்.