அ.தி.மு.க மாநில அம்மா பேரவை இணைசெயலாளரும், முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ வுமான தோப்பு வெங்கடாஜலம் தி.மு.கவில் இணைய உள்ளதாக வரும் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கட்சி பதவியை உதறினார். மேலும் அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினராக தொடரப்போவதாக முதல்வரை சந்தித்த பின்பு தெரிவித்தார். ஆனால் தோப்பு வெங்கடாஜலம் அமைச்சர் பதவி கேட்டதாகவும் அதற்கு முதல்வர் எடப்பாடி மறுத்துவிட்ட்தாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்த தோப்பு வெங்கடாஜலம்,“ எந்த காரணம் கொண்டும் நான் ஒரு போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். அதே சமயம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருந்துறை பகுதியில் அ.தி.மு.க.வுக்கு வேலை செய்யாமல் அ.ம.மு.க.வுக்கு வேலை செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

கருத்து கணிப்பை மீறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அ.தி.மு.க.வை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன். வேறு கட்சிக்காரர்கள் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். மக்களோடு மக்களாக அ.தி.மு.க. தொண்டனாக கரை வேட்டி கட்டி கொண்டு என்றும் அ.தி.மு.க தொண்டனாகவே இருப்பேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என நான் அவருக்கு துணையாக நின்றேன். இப்போதும் எனது நிலை அதே தான்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தேர்தலில் எதிர்க்கட்சியினரை குறி வைத்துதான் நமது பிரசாரம் இருக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்களே கட்சிக்கு துரோகம் செய்து உள்ளனர். அப்படிப்பட்ட சிலரை நாங்கள் பிடித்து கொடுத்தோம்” என சொன்னார். ஆனால் அ.தி.மு.க பிறகு அ.ம.மு.கவிற்கு சென்று தற்போது தி.மு.கவில் கோலச்சி கொண்டிருக்கும் செந்தில்பாலாஜியிடம் டீல் பேசிவிட்டாதாகவும் அதற்கு செந்தில்பாலாஜி தலை அசைத்து தி.மு.கவில் தோப்பு வெங்கடாஜலத்தை தி.மு.கவில் இணைப்பதற்கான வேலையை ஜரூராக செய்து வருகிறார் என அடித்து சொல்லப்படுகிறது.