கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆளும் கட்சியினர் எனக்கூறி கொண்டு அராஜக செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், கட்சியின் பெயருக்கு கலங்கம் வந்துவிடக்கூடாது என நோக்கத்தில் கட்சி நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆளும் கட்சியினர் எனக்கூறி கொண்டு அராஜக செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், கட்சியின் பெயருக்கு கலங்கம் வந்துவிடக்கூடாது என நோக்கத்தில் கட்சி நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தூத்துக்குடி மாநகரத்தை சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துதள்ளார்.
