Asianet News TamilAsianet News Tamil

சாத்தான்குளம். நீதியை நிலைநாட்ட போராடும் நீதியரசர்கள் பெண் காவலருக்கும் பாராட்டு.! ட்விட் போட்ட கமல்ஹாசன்.!

கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

Thisayanvilai. Judges who fight for justice Dwight Poet Kamal Haasan.!
Author
Tamilnadu, First Published Jun 30, 2020, 9:16 PM IST

 சாத்தான் குளம் தந்தை மகன் மரணம் காவல்துறைக்கு பெருத்த அவமானத்தை தேடிதந்துள்ளது. காவல்நிலையத்தில்மரணத்திற்கான அடையாளங்களை அழிக்கும் வேலைகள் நடந்தேறியிருக்கிறது. அதனால் விசாரணை செய்ய சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை அங்கிருந்த சாதாரண காவலர் கூட ஒருமையில் பேசியும் மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்.இதனை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக கண்டித்துள்ளது.அந்த காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

Thisayanvilai. Judges who fight for justice Dwight Poet Kamal Haasan.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Thisayanvilai. Judges who fight for justice Dwight Poet Kamal Haasan.!

இந்நிலையில் மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சாத்தான்குளம் சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

"சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios