This regime like dengue - dinakaran
டெங்கு காய்ச்சலை எப்படி கட்டுப்படுத்தப்பட வேண்டுமோ, அதேபோல் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை, பெசன்ட் நகரில் அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய டிடிவி தினகரன், இந்த ஆட்சி டெங்கு காய்ச்சலைவிட மோசமானது என்றார்.
இந்த ஆட்சி டெங்கு காய்ச்சலைவிட மோசமானது. டெங்குவால் இறந்தால் என்ன? அவர்களுக்கு ஆட்சி இருந்தால் போதும். டெங்குவை விட இவர்கள் கொடியவர்கள், மக்களுக்கு ஆபத்தானவர்கள் என்று கூறினார்.
ஜெயலலிதா இருந்த வரை ஆட்சி சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் இல்லாத இந்த அரசில் இவர்கள் புலிகேசிபோல் நடந்து கொள்கிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார்.
அவர்கள் மக்களை திசை திருப்புவதற்காகவே, அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பல்வேறு விகடகவி வேலைகளை செய்து வருவதாகவும் டிடிவி குற்றம் சாட்டினார். இந்த காமெடியன்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
