திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என பெரும் கேள்வியாக இருந்தது.இது குறித்த வழக்கு அவசர அவசரமா நேற்று இரவு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என பெரும் கேள்வியாக இருந்தது. இது குறித்த வழக்கு அவசர அவசரமா நேற்று இரவு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசு தரப்பில் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்றும்,காந்தி மண்டபம் அருகில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்தது. கடைசியில், நிலுவையில் இருந்த 5 வழக்குகளும் கருணாநிதிக்காக வாபஸ் பெறப்பட்டு, சட்ட சிக்கலை நீக்கி, மெரினாவில் நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

