Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் அதிகமாக கொரோனா பரவ இதுதான் காரணம்... கொரோனா தாக்கியவர் குபீர் குற்றச்சாட்டு..!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 வயதான ரஜினி ப்ரியா என்பவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் ஆனால், சென்னை மாநகராட்சி தனக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

This is the reason why Corona has spread so much in chennai
Author
Tamil Nadu, First Published Jun 30, 2020, 12:09 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 வயதான ரஜினி ப்ரியா என்பவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் ஆனால், சென்னை மாநகராட்சி தனக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். This is the reason why Corona has spread so much in chennai

இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள வீடியோவில், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தேன். அதில் கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்தது. நான் சென்னை அம்பத்தூர் ஐடிஐ பகுதியில் வசிக்கிறேன். மருத்துவ அதிகாரிகள் இந்த ரிப்போர்ட்டை சென்னை மாநகராட்சிக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பி வைப்பதாகக் கூறினார்கள். நானும் சென்னை மாநகராட்சி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பார்கள் எனக் காத்திருந்தேன். ஆனால், யாரும் வந்து அழைத்துச் செல்லவில்லை. எனக்கு கடுமையான தலைவலி, இருமல் உள்ளதால் அதனை என்னால் தாங்க இயலவில்லை.This is the reason why Corona has spread so much in chennai

மெடிக்கல் சென்று மருந்து மாத்திரைகள் கேட்டால், சட்டப்படி கொடுக்கக்கூடாது என மறுத்துவிடுகிறார்கள். நான் என்ன செய்வது? எனது தந்தையையும், மாமியாரையும் மருத்துவ அதிகாரிகள் அழைத்துச் சென்றார்கள். வெகு நேரம் ஆகியும் அவர்கள் வரவில்லை. மருந்து, மாத்திரை, உணவு கொடுக்கக்கூட ஆளில்லை. சென்னையில் கொரோனா தொறு அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராய்ந்த பிறகுதான் தெரிய வந்துள்ளது. ஏனென்றால் கொரோனா பாதிப்புள்ளவர்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அதனால் தான் சென்னையில் கொரொனா அதிகரித்து வருகிறது’’ என அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

ஆனால், ரஜினி பிரியா சென்னை மாநகராட்சியை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அவர் வசிக்கவில்லை. ஆகையால் சென்னை மாநகராட்சியை அவர் குறைசொல்ல முடியாது என்கின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios