மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் முழுமை அடைந்து விட்டன. ஜெயலலிதாவை பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒரே கருத்து.. சிறந்த முதல்வர்.. ஆளுமை மிக்க ஐயன் லேடி என்று.. இதை தாண்டி அவருடைய உறவினர்கள் உடனான உறவுகள் பற்றி எதுவும் தெரியாத நிலை தான் இருந்தது.. அதே வேளையில் ஜெயலலிதா என்றாலே அவருடைய தோழி சசிகலா   மற்றும் சசிகலாவின் உறவினர்கள் மட்டும் தான் அவரை சுற்றி அறியப்பட்டது. இது வரை ஜெயலலிதாவின் மரணத்தில் என்ன நடந்தது என உண்மை நிலவரம் வெளிவராத நிலையில், ஜெயலலிதாவின் உறவினர்கள் அவரை பற்றி சில பல நினைவுகளை பகிர்ந்து  வருகின்றனர்.


அந்த வகையில் ஜெயலலிதாவின் அத்தை மகள், ஜெ உடன் தொடர்பில் இல்லாமல்  உறவினர்கள் தனித்து இருந்தது ஏன் என்ற கேள்விக்கு, பிரபல தொலைகாட்சியில் பேட்டி அளித்துள்ளார் 
அப்போது, அத்தையை பொறுத்தவரை உறவினர்களுடன் நல்லா பழக கூடியவர்.. ஆனால் அவர் அரசியலுக்கு சென்ற உடன் எங்கள் யாருக்கும் அது பிடிக்காமல் இருந்தது.. அதனை தாண்டி அதிமுகவின் செயலாளராக அத்தை ஜெயித்த உடன் எங்களுடனான  உறவில் இடைவெளி ஏற்பட்டு விட்டது.. அதற்கு காரணம் என் அப்பா முதற்கொண்டு, அத்தை அரசியலில் இருப்பதை பிடிக்காமல் போனதே.. மற்றொன்று அவரும் அரசியலில்  மிகவும் பிசியாக இருந்து வந்தார்...

மேலும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இறந்தால் கூட, எதனையும்  கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டார் அவர். அதனால் அவரை விட்டு நாங்களும் சற்று தள்ளி நின்று பார்த்தோமே தவிர.. அவருடன் நெருங்கி இருக்க முடியாமல் போய் விட்டது என அவர் தெரிவித்து உள்ளார்.