தங்க கடத்தலுக்கு இதுதான் காரணம்.! இதை மட்டும் செய்யுங்க போதும் - மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்த ராமதாஸ்

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்க கடத்தலை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

This is the reason for gold smuggling Just do this pmk founder Ramadoss gave the idea to the central government

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு மீன்பிடி படகுகள் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நடுக்கடலில் சோதனையிட்டனர். அதையறிந்த கடத்தல்காரர்கள் 17.74 கிலோ தங்கத்தை கடலில் வீசி விட்டனர்.

கடலோரக் காவல்படை உதவியுடன் கடலில் வீசப்பட்ட தங்கத்தை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் மீட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு அதிக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.  2022 - 23 ஆம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 209 கிலோ கடத்தல் தங்கமும், தேசிய அளவில் 950 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

This is the reason for gold smuggling Just do this pmk founder Ramadoss gave the idea to the central government

இதையும் படிங்க..சென்னைவாசிகளே உஷார்.! இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் - அதிரடி உத்தரவு.!!

தமிழகத்தில் பிடிபட்ட தங்கம் 209 கிலோ என்றால், பிடிபடாமல் கடத்திச் செல்லப்பட்ட தங்கத்தின் அளவு இன்னும் பலநூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 706 டன் ஆகும். இதில் பாதிக்கும் கூடுதலாக 400 டன் அளவுக்கு இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அதிக தங்கம் கடத்தி வரப்படுவதாக தெரிகிறது. தங்கக் கடத்தல் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்கு காரணம் இந்திய அரசின் வரிக்கொள்கை தான். பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தங்கத்தின் விலை ஒரே அளவில் இருந்ததால் தங்கக் கடத்தல் குறிப்பிடும்படியாக இல்லை.  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தங்கம் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், அதற்கு  மாறாக, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.50 விழுக்காடாக உயர்த்தி,  அதன் மீது வேளாண் மற்றும் கட்டமைப்பு வரி என்ற பெயரில் 2.5% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.  இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது மொத்தம் 15% வரி விதிக்கப்படுகிறது. அதாவது, 10 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டால், அதற்கு ரூ.1.50 கோடி வரி செலுத்த வேண்டும் என்பதால் தங்கக் கடத்தல் கவர்ச்சிகரமான தொழிலாக மாறிவிட்டது.

இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 4 கொலை!.. கஞ்சா விற்பனை அமோகம்! முதல்வருக்கு இது தெரியாது - திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

This is the reason for gold smuggling Just do this pmk founder Ramadoss gave the idea to the central government

இதனால் ஒருபுறம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, இன்னொருபுறம் சட்டவிரோத கறுப்பு பொருளாதாரம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. இது நல்லதல்ல.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கத்தின் மீது 1 விழுக்காடு விற்பனை வரி மட்டும் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இறக்குமதி வரி, வேளாண்மை மற்றும் கட்டமைப்பு வரி, ஜி.எஸ்.டி வரி என 18% வரி வசூலிக்கப்படுகிறது.

ஒரு சவரன் தங்கத்தின் மீதான இந்த வரிகளின் மதிப்பு மட்டும் ரூ.7,750 ஆகும். கிட்டத்தட்ட இதே அளவுக்கு சேதாரம் வசூலிக்கப்படுகிறது என்பதால் ஒரு சவரன் மதிப்பில் தங்க நகை எடுக்கும் பொதுமக்கள் 15,500 ரூபாயை வரியாகவும், சேதாரமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

பத்தாண்டுகளுக்கு முன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி வருவாய்க்காக விதிக்கப்படவில்லை. மாறாக நடப்புக்கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்காகவே விதிக்கப்பட்டது. இப்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்து விட்ட நிலையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் அல்லது வெகுவாக குறைக்க வேண்டும். இதன் மூலம் தங்கக் கடத்தலை தடுப்பதுடன், நாட்டில் தங்கத்தின் விலையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios