THIS IS THE FIRST TIME HELD IN INDIA IT RAIDES FOR MANNARKUDI FAM

மன்னார்குடி குடும்பத்தை குறி வைத்து தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலத்தில் கூட வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை தான் :ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி"

இன்று காலை ஏழு மணி முதல் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் என்ன ஒரு விஷயம் என்றால், 2000  அதிகாரிகள், 190 இடங்கள்,  200 வாகனங்கள், ஒரே மாதிரியான ஸ்டிக்கர் SRINI WEDS MAHI ......இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டது என்னவோ ...மன்னார்குடி குடும்பத்தை குறி வைத்தே...

ஒரே குடும்ப பின்னணியை குறி வைத்து சோதனை நடத்த வருமான வரித்துறை எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை என்பது இதுவரை இந்தியாவிலேயே நடக்காத ஒன்று... அதாவது இதுதான் இந்தியாவிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

அதே வேளையில், 2000 அதிகாரிகள் அடங்கிய ஒரு மாபெரும் இந்த சோதனை இன்னமும் முடியவில்லை..ஆட்களும் பற்றாக்குறை என்றால் பார்த்துகொள்ளுங்களேன்....எவ்வளவு சொத்து இருக்கும் என்று திகைக்க வைக்கிறது இன்றைய சோதனை...

இந்த அதிரடி சோதனை கடந்த வாரமே நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாம் ஆனால் மோடியின் தமிழக வருகையால் திட்டம் ஒரு வாரம் தள்ளி வைத்து இன்று நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது