இதுதான் நிரந்த தீர்வு - முதல்வர் ஓபிஎஸ் பேட்டி 

தற்போது வந்துள்ள அவசர சட்டத்தை வரும் 23 ஆம் தேதி கூட்டத்தொடரில் சட்டமாக்குவோம். இது நிரந்தர சட்டம் தான் என்று முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் கலாச்சார பண்பாட்டுக்கு சின்னமாய் விளங்கும் ஜல்லிக்கட்டுக்கான தடை முழுமையாக நீக்கபட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

 வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 23 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது, அது முழுமையான சட்டமாக சட்டமாக முழுமையாக் மாற்றப்படும். 

6 மாத காலத்திற்கு முழுமையாக உறுதியாக நடைமுறையில் இருக்கும். அதற்குள் சட்டமாக்கப்படவேண்டும். 

அதற்காக உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். நாம் கால தாமதம் செய்யாமல் வருகின்ற 23 ஆம் தேதியே சட்டத்தை நிறைவேற்றி விடுவோம்.

அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் மீதும் தமிழக மக்களின் முன்னேற்றம் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு தான் நல்லாட்சி நடத்தி வந்தார்கள். 

அந்த வகையில் தமிழக மக்களின் உரிமைக்கு எப்போதெல்லாம் தடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதற்காக உரிமை காக்கும் முதலமைச்சராகத்தான் இருந்தார்கள். 

அம்மாவின் அரசும் ,சின்னம்மா அவர்கள் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள்.உரிய சட்ட முன் வ்டிவு வரைவு வரும்.

நிரந்தர தீர்வு ஏற்படும் வரை நீங்கள்?

இதுதான் நிரந்தர தீர்வு

மாண்புமிகு அம்மா அவர்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரத பிரதமரை சந்தித்து முக்கியத்துவத்தை எடுத்துவைத்த உடனேயே தமிழக அரசு முயற்சி எடுத்தால் நாங்கள் துணை நிற்போம் என்று சொல்லி உதவி செய்துள்ள பிரதமருக்கு நன்றி சொல்கிறேன்.

அறவழி போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு , இளைஞர்களுக்கு , பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் . இவ்வாறு தெரிவித்தார்.