Dinakaran replied for edappadi and Panneerselvam

தமிழகத்தை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.வின் பொதுக்குழு புயல். கரையை கடப்பதற்குள் அதன் தீர்மாணங்கள் கதகளி ஆட துவங்கியிருக்கின்றன. 

”குறிப்பாக “29_12_2016”ல் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் ரத்து. அவர் செய்த நியமனங்கள், நீக்கங்கள் அனைத்தும் ரத்து” என்கிறது ஒரு தீர்மாணம். 

சசி தலைமையிலான தினகரன் அணிக்கு இந்த தீர்மாணம் பேரதிர்ச்சியை தந்திருக்கிறது இருந்தாலும் கூட அந்த தீர்மாணத்திலிருந்து ஒரு முக்கிய நூலை பிடித்துப் பேச துவங்கியிருக்கும் தினகரன் அணி சீனியர்கள் “சசிகலா அறிவித்த நியமனங்கள் செல்லாது என்று தீர்மானம் இயற்றியுள்ளார்கள். 

சரி! அப்படியானால் இன்று முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராய் கட்சிக்குள் அறிவித்தது சசிகலாதானே! அப்படியானால் எடப்பாடியின் நியமனமும் அவர்களின் தீர்மானப்படி செல்லாமல் போகிறதா? முதல்வர் எடப்பாடியின் நியமனம் ரத்தாகிறதென்றால் துணைமுதல்வர் பதவியில் சமீபத்தில் ஒட்டிக் கொண்ட பன்னீசெல்வம் பதவியும், அமைச்சர்கள் அத்தனை பேரின் பதவியும் ரத்தாகிறதுதானே?! தீர்மானத்தின் அர்த்தத்தை இப்படித்தானே எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதைவிடுத்து, இல்லை அப்படியில்லை! என்று தனி வியாக்யானம் பேசுவார்களேயானால் நேற்றே எங்கள் தலைவர் சொன்னபடி இந்த ஆட்சியை கூடிய விரைவில் அப்புறப்படுத்துவோம்.” என்று திருப்பி அடிக்கிறார்கள். 

ம்ம்ம்ம் முடியல!....