உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கூட இந்த கருத்துக்கள் வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டும் விழா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.இந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எடுக்கப்படுவதாகவும் ராமர் கோயில் கட்டும் பணிகள் சரியான நேரத்தில் தொடங்கப்பட வேண்டும் என்று சங்கராச்சாரியார்ஸ்வரூபாநந்த் சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார்.

"நாங்கள் எந்த பதவியையும் விரும்பவில்லை அல்லது ராமர் கோயிலின் அறங்காவலராக இருக்க விரும்பவில்லை. கோவில் ஒழுங்காக கட்டப்பட வேண்டும். சரியான நேரத்தில் அடிக்கல் நாட்டப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்.ஆனால் இது ஒரு அசுப் காதி (தீங்கு விளைவிக்கும் நேரம்). என்று அவர் மேற்கோள் காட்டினார். சங்கராச்சாரியார் அதை தீங்கு விளைவிக்கும் நேரம் என்று அழைப்பதற்கு எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது.

நாங்கள் ராமர் பக்தர்கள். யார் ராமர் கோவிலைக் கட்டினாலும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். ஆனால் அதற்காக பொருத்தமான தேதி மற்றும் நல்ல நேரம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் அரசியல் இருக்கக்கூடாது. அரசியல் காரணமாக, இந்துக்களின் பிரச்சினைகள் தட்டிக் கழிக்கப்படுகின்றன. கோவில் பொதுமக்களின் பணத்துடன் கட்டப்பட்டு வருகிறது. அவர்களின் கருத்தையும் கேட்க வேண்டும். என்றார் சங்கராச்சாரியார் ஸ்வரூபாநந்த்சரஸ்வதி.ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவிலின் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.