தமிழகத்தில் 2021ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக முழுவீச்சில் இறங்கியுள்ளன தமிழக அரசியல் கட்சிகள். ஆனால், அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக தேர்தல் வேலைகளை கச்சிதமாக முடுக்கி விட்டுள்ளது அதிமுக தலைமை. 

சட்டமன்ற தேர்தலுக்காக அஇஅதிமுக சார்பில் 11  பேர் கொண்ட அறிக்கை தயாரிப்பு  குழுவும் , 3 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவும் ,ஊடக சந்திப்புகளுக்கு 7 பேர் கொண்ட குழுவும், எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளிக்க 9 பேர் கொண்ட குழுவும், 3 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு குழுவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. 11 பேர் கொண்ட அறிக்கை குழு உட்பட  5 தேர்தல் குழுக்களை உருவாக்கியுள்ளது. 
அ.இ.அ.தி.மு.க. தன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள்  11 பேர் கொண்ட அறிக்கை குழுவை கட்டமைத்துள்ளது. இதை தவிர்த்து, எதிர்க்கட்சியின் புகார்களுக்கு பதிலளிக்கவும், ஊடக ஒருங்கிணைப்பிற்கும் தனித்தனி குழுக்களை உருவாக்கியுள்ளது.

தேர்தல் சம்பத்தப்பட்ட பணிகளுக்காக அனைத்து தொகுதிகளையும் 30 மண்டலங்களாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்களையும், அமைச்சர்களையும் அ.இ.அ.தி.மு.க. தலைமை நியமித்துள்ளது. இப்படி ஒவ்வொரு குழுவாக பிரித்து தேர்தல் வேலைகளை கனகச்சிதமாக ஆரம்பித்து விட்டது அதிமுக தலைமை.

இதன் மூலம் அரசியலில் தடுப்பாட்டத்தையும் தாண்டி அடித்து ஆடி வருகிறது அதிமுக தலைமை.