அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்கிய அரசியல் பயணத்தின் முதல் பொதுக்கூட்ட அரங்கேற்றத்தை நேற்று மதுரையில் வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்று கட்சியின் பெயரையும் வெள்ளை நிறப் பின்னணியில் பிணைந்த கரங்கள் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிஇருந்தார். கேஜ்ரிவாலோடு சில நிமிடங்கள் ஆலோசனை நடத்திய பின்னர் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தனர். சரியாக 7.25 மணிக்கு சிவப்பு, கறுப்பு, வெள்ளை வண்ணங்களுடன் கூடிய இணைந்த கைகள் கொடியை 40 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றி அறிமுகம் செய்தார்.

கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு மேடைக்கு வந்த கமல்ஹாசன், “இது உங்களுக்கான கட்சி; மக்களுக்கான கட்சி. நான் அறிவுரை சொல்லும் தலைவன் அல்ல; அறிவுரை கேட்கும் தொண்டன். நான் உங்கள் கருவி; தலைவனல்ல” என்றபடியே, ‘மக்கள் நீதி மய்யம்’ என்று தனது கட்சியின் பெயரை அறிமுகம் செய்தார்.

“நான் சமைக்கவிருக்கும் மக்களாட்சியின் ஒரு சோற்றுப் பதமே இந்தக் கூட்டம்” என்ற மக்களைப் பார்த்து கைநீட்டிய கமல், “இந்தச் சோற்றுப் பருக்கைகளைத் தொட்டுப் பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப் பாருங்கள்” என ஆவேசமாக கர்ஜித்தார் கமல். அகில இந்தியப் பொறுப்பாளராக ஆர்.தங்கவேலு அறிவிக்கப்பட்ட பின்னர், அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

திருச்சி கமல்ஹாசன் நற்பணி மன்றத்திலிருந்து ரசிகர்களால் எடுத்து வரப்பட்ட தீப்பந்தம் அவரிடத்தில் வழங்கப்பட்டது. மாவட்டப் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்ததைப் போலவே கட்சியின் உயர் மட்டக் குழு அறிமுகம் செய்யப்பட்டது.

சரி எப்படி சேர்ந்தது இந்தக் கூட்டம்? கமலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமானம் மூலம் மாலை 5 மணியளவில் மதுரை வந்தார். டெல்லி முதல்வர் என்பதால் அவரை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவரை வரவேற்றார்.

அதேநேரம் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டிருந்தன. பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை அனைவரும் காணும் வகையில் எல்.சி.டி திரை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில், கலந்துகொள்வதற்காக காலை முதலே ரசிகர்கள் மதுரையை நோக்கி படையெடுத்தனர். பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் மட்டுமல்லாது தனியார் பாதுகாவலர்களும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

மதுரை முழுவதும் ‘நம்மவர்’ என்ற பெயரில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசனின் பிரஸ் மீட்டில் கூட ‘நம்மவர்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. விருந்தினர் மாளிகையில் இருந்து ஒத்தகடையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு இன்று மாலை 6.35-க்குப் புறப்பட்டதும் முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் அணிவகுக்க, அதன் பின்னர் கமல் நற்பணி இயகக்த்தினர் டூவீலர்களில் அணிவகுக்க மதுரையை உலுக்கியது.

 

கமல் ஏற்றி வைப்பதற்காக 40 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் ஒத்தகடை மேடை அருகே மக்கள் வெள்ளத்துக்குள் கம்பீரமாக நுழைந்தார் கமல்.
குறிப்பு, இந்த கூட்டத்து கோட்டரும், கொழி பிரியாணியும் எதிர்பார்த்து யாரும் வரல, ரசிகர்கள் மட்டுமே வருவார்கள் என எதிர்பார்த்து தான் வேன், பஸ் ஏற்பாடு செய்தார்களாம் ஆனால், ரசிகர்கள் அல்லாத பெண்களும், இளைஞர்களும் தாமாகவே வந்ததாக இந்த மீட்டிங்க்கு வந்த பெண்களே சொல்லிக்கொண்டிருந்தார்களாம், இப்படி கூட்டம் வர காரணம் என்ன? கமலுக்கு இவ்வளவு ரசிகர்களா?

தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், தனக்கான அரசிய மேடையாக மாற்றிக் கொண்டார். வாரம் ஒருமுறை வந்தாலுமே நாட்டில் நடக்கும் அநியாயங்களை தோலுரிக்கும் விதாமாக வார்த்தைகளால் தெறிக்கவிட்டார்.

நடுத்தர வர்க குடும்ப பெண்களை கமலின் இந்த தெளிவான கவர்ந்ததேன்றே செல்லலாம். ட்விட்டரில் மட்டுமே இப்படை குழப்பிவிடுவார் எண்டு பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேலையில், தனது அரசியல் பயணத்துக்கான நாள் குறித்து பதிலடி கொடுத்தார்.
ஒரு சராசரி அரசியல் தலைவராக இல்லாமல், அரசியல் தலைவர்களுக்கு பதிலளிக்கு விதம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக சென்றடைந்தது.  

என்னதான் கமல் ஒரு பெரிய சினிமா நட்சத்திரமாக இருந்தாலும், காவேரி பிரச்சனைக்காக தனது ரசிகர்கள் பட்டாளத்தோடு கர்நாடக சென்று கோரிக்கை வைத்துவிட்டு வந்தார். அப்போதே எம்.ஜி.ஆர் அரசியலுக்கு அழைத்ததாக மேடைகளில் சொன்னாலும், கலைஞரின் மேல் உள்ள ணன் மதிப்பின் காரணமாகவே அவர் அரசியல் பற்றி வாய் திறக்காமல் இருந்தார்.

ஆனால் அரசியலுக்கு வருவதாக ரஜினியைப்போல சொல்லிக்கொண்டே இருக்கவில்லை, தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை வழங்கிக் கொண்டே வழிநடத்திச் சென்று கொண்டிருந்தார்.

புதுமையான அரசியல்வாதி... கமலுக்கு எதிராக பேசிய அதிமுக அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இப்படி பதிலடி கொடுத்த ரசிகர்களுக்கு ‘‘தரந்தாழாதீர். வயது (திட்டுதல்) சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை.

இவருக்கு பதிலளிக்க நானே போதும்’’  இப்பட பல அறிவுரையால் செதுக்கினார். இப்படி பல இருக்கிறது. என்னதான் கமல் குழப்பவாதி என அரசியல் புள்ளிகள் சொன்னாலும் நேற்று மக்கள் மத்தியில் தனது தெளிவான பேச்சால் ஒட்டுமொத்த அரசியல் புள்ளிகளுக்கும் தனது கொள்கையை புரியவைத்திருக்கிறார்.