Asianet News TamilAsianet News Tamil

இது இந்துக்கள் நாடுதான்.. ஆ.ராசாவை ஓங்கி அடித்த பிரேமலதா விஜயகாந்த்.

ஆமாம் இது இந்துக்கள் நாடு தான் என்றும், ஆ. ராசா கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக எந்த ஒரு ஜாதி மத பாகுபாடும் இன்றி முழுக்க முழுக்க மக்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்ட காட்சியை என்றும் அவர் கூறினார்.
 

This is a country of Hindus. Premalatha Vijayakanth Retaliation A.Raja.
Author
First Published Sep 14, 2022, 4:04 PM IST

ஆமாம் இது இந்துக்கள் நாடு தான் என்றும், ஆ. ராசா கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.தேமுதிக எந்த ஒரு ஜாதி மத பாகுபாடும் இன்றி முழுக்க முழுக்க மக்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்ட காட்சியை என்றும் அவர் கூறினார்.

திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக- திமுக இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே சித்தாந்த ரீதியான கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் திக தலைவர் கி. வீரமணி பாராட்டு விழாவில் ராசா பேசியது புயலைக் கிளப்பியுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் பேசிய அவர் நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், நீ இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால்,  நீ பாரசீகனாக இல்லாமல் இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

இதுபோன்ற கொடுமை வேறு எந்த நாட்டிலும் இல்லை, அவை இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரனாக தான் இருப்பாய், சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை உன்னை பஞ்சமன் என்றும், நீ இந்துவா இருக்கும் வரை நி தீண்டத்தகாதவனாகவே இருப்பாய், எத்தனைபேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாத நாளிலிருந்து விரும்புகிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பினார். சனாதனத்தை எரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என அவர் கூறினார்.

அவரின் இந்த பேச்சை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குரல் கொடுத்துள்ளார். தேமுதிக தொடங்கப்பட்டு 17  ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 18ஆம்  ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது, அதில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் ,கட்சி 18 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை  காரணமாக கட்சியில் சற்று தொய்வு இருக்கலாம், ஆனால் எந்த நோக்கத்துக்காக கட்சி உருவாக்கப்பட்டதோ  அதை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது, இந்துக்கள் குறித்து ஆ. ராசா கூறிய கருத்து ஏற்புடையது அல்ல, இந்தியா என்பது இந்துக்களின் நாடு தான் 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிக தயாராகிவருகிறது யார் கூட்டணி என்பது குறித்து தெரியவில்லை, இன்னும் இரண்டு ஆண்டு கால அவகாசம் உள்ளது கட்சியின் வளர்ச்சி பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவது உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios