this female politicians responsibility shifted to another politician

திரையுலகில் ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை நக்மா, நல்ல மார்கெட் தனக்கு இருந்த போதே திரையுலகை விட்டு விலகினார். அதன் பிறகு ஆன்மீகத்திற்கு தாவிய இவர் தற்போது அரசியல்வாதியாக காங்கிரஸ் கட்சியில் தொண்டாற்றி வருகிறார்.

இவர் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் தமிழக, புதுச்சேரி மகளிர் காங்கிரஸின் பொறுப்பாளராக, 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது நக்மாவை அந்த பதவியில் இருந்து விலக்கி இருக்கிறது காங்கிரஸ் மேலிடம். மேலும் அவருக்கு பதிலாக ”பாத்திமா ரோஸ்னா”வை புதிய பொறுப்பாளராக நியமித்திருக்கின்றனர்.

நக்மா இனி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரியின் மகளிர் காங்கிரஸின் பொறுப்பாளராக செயல்படுவார். என்றும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்திருக்கிறது.