திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்!  

தி.மு.க.வின் திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

வருகிற 28 ஒன்று நடைபெற உள்ள திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பூண்டி கலைவாணன் போட்டியிட வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே யூகிக்கபட்டிருந்தது. இதற்காக, இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நேர்காணலில் 7 பேர் கலந்துகொண்டனர்.

திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பதற்கான நேர்காணல், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் கட்சியின் துணை பொது செயலாளர் ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர்  டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணல் முடிந்த பிறகு பேராசிரியர் அன்பழகன் ஒப்புதல் உடன் கட்சியின் வேடப்பாளராக பூண்டி கலைவாணனை தேர்வு செய்து, அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

யார் இந்த பூண்டி கலைவாணன்?

பூண்டி கலைவாணன் திமுக திருவாரூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவருடடைய   தந்தை பெயர் கிருஷ்ணசாமி.இவருக்கு இரண்டு மகன்கள், சிந்தனை என்கிற மனைவியும் உள்ளனர். முதன் முதலில் கட்சியில் இணைந்த போது, பேரூர் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். 

இரண்டு முறை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மூத்த சகோதரர் பூண்டி கலைச்செல்வன். இவரும் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான, பூண்டி கலைவாணன், தற்போது வரை மாவட்ட செயலாளர் பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில், இவரை தி.மு.க.வின் திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவித்து திமுக தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.