thirunavukkarasar slams palanisamy and panneerselvam

பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தெய்வமாக வழிபட்ட ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது, பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒளிந்துகொண்டிருந்தார் என திருநாவுக்கரசர் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு விழா, கோவையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தன் வீட்டில் ரெய்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக எதுவுமே தெரியாததுபோல, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பழனிசாமி ஒளிந்துகொள்கிறார். ஆவி ஸ்பெஷலிஸ்ட் பன்னீர்செல்வமும் போயஸ் கார்டன் ரெய்டு பற்றி ஒன்றுமே கூறவில்லை என திருநாவுக்கரசர் சரமாரியாக விளாசித்தள்ளினார்.