தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம், தனது மகள் திருமண அழைப்பிதழை திருநாவுக்கரசர் வழங்கினார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவு வருகின்றன. காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன், வரும் 20 ஆம் தேதி திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்த உள்ளார்.

அந்த மாநாட்டின்போது, ரஜினி ரசிகர்கள் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.நடிகர் ரஜினிகாந்த் ஆட்சியை கைப்பற்றுவார் என்றும் தமிழருவி மணியன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது, திருநாவுக்கரசர் தனது மகள் திருமண அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்திடம் அளித்தார்.