thirunavukarasar explain on 18 MLA Reject from Edappadi Govt
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் தனபால்.
இந்திய அரசியல் சட்டத்தின் 10வது அட்டவணையின்படி கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த தகுதிநீக்க நடவடிக்கை என்பது சட்டவிரோதமானது என்றும் ஜனநாயகப் படுகொலை என்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், ஆட்சியைத் தக்கவைப்பதற்கான தந்திர நடவடிக்கை என்றார். மேலும் சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறி நடந்தால் மட்டுமே எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடியும் என தெரிவித்தார்.
