Asianet News TamilAsianet News Tamil

அடாவடி அரசியலை கைவிடாவிட்டால்… நாம் தமிழர் கட்சியை எச்சரிக்கும் திருமுருகன்காந்தி!!

ரவுடித்தனமான அரசியலை நாம் தமிழர்கள் கட்சி கைவிடவேண்டும் என்றும் இல்லையேல் அரசியலில் அவர்கள் தனிமைப்பட்டு போவார்கள் என்றும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தெரிவித்துள்ளார். 

thirumurugan gandhi warned naam tamilar
Author
Tamil Nadu, First Published Nov 6, 2021, 5:39 PM IST

ரவுடித்தனமான அரசியலை நாம் தமிழர்கள் கட்சி கைவிடவேண்டும் என்றும் இல்லையேல் அரசியலில் அவர்கள் தனிமைப்பட்டு போவார்கள் என்றும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, எந்த ஊரில் எல்லாம் மீத்தேன் திட்டம் வருகிறது என்று சொல்கிறார்களோ அந்த ஊர்களுக்கு எல்லாம் சென்று மீத்தேனின் ஆபத்துக்களை அம்மக்களுக்கு சொல்லி,  போராட்டங்களை கட்டமைத்து,  அதற்காக பல்வேறு வழக்குகளை சந்தித்து,  சிறைக்கு சென்று இன்றைக்கும் அந்த அரசு அடக்குமுறையை எதிர்கொண்டு,  இந்த நிலத்தை காக்க போராடி வருவபவர் பேராசிரியர் ஜெயராமன் என்றும் புகழாரம் சூட்டினார். 35 ஆண்டுகளாக தமிழ்தேசிய அரசியல் களத்தில் இருக்கக்கூடிய  மூத்த தலைவர் ஜெயராமனை, மிகவும் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகம் மூலமாகவும்,  அவருக்கு ஆதரவாக இருக்கின்ற தோழர்கள் மீது ஒரு ஜனநாயக வன்முறை செய்து   மயிலாடுதுறை நாம் தமிழர் பொறுப்பாளர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய திருமுருகன்காந்தி, இது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் பெயரை சொல்லிக்கொண்டு இப்படியான ஜனநாயக விரோத அரசியல் செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறிய திருமுருகன் காந்தி, அரசியல் கருத்துக்களில் மாற்று இருந்தால் மாற்று கருத்துக்களை முன்வைக்கலாம் என்றும் விவாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக, அதிமுக என்று பல்வேறு கட்சியினர் கடந்த காலங்களில் ஈழ ஆதரவு புலிகள் ஆதரவு  விசயங்களில் இயங்கினர் என்று கூறிய திருமுருகன்காந்தி, அவர்கள் யாரும் கொச்சைப்படுத்தும் விதமாக ஜனநாயக விரோதமாக பேசிக்கொண்டதில்லை என்றும் ஈழ விடுதலை என்று வந்துவிட்டால் ஒன்றுபட்டுதான் இருந்துள்ளனர் என்றும் தெரிவித்ததோடு, இந்த அரசியல் பண்பாடுதான் இந்த நிலத்தின் பண்பாடாக இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும் ஈழவிடுதலை என்று வரும்போது எல்லோரும் ஓரணியில் திரண்டு நின்றிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போலத்தான் இயக்கங்களும் இருந்துள்ளன.  

thirumurugan gandhi warned naam tamilar

அப்படியான பண்பாடுகளை எல்லாம் மறந்து தமிழ்தேசிய களத்தில் போராடுகின்றவர்களை மிரட்டுகின்ற அரசியல் ஏற்றுக்கொள்ள இயலாதது என்றும் எந்த இடத்திலும் நாங்களை அதை அனுமதிக்க போவதில்லை என்றும் கூறிய அவர், பேராசிரியர் ஜெயராமனுடன் நாங்கள் துணை நிற்போம் என்றும் இப்படியான ஒரு ரவுடித்தனமான ஒரு அரசியலை மேற்கொள்கின்றவர்கள் மீது அந்த கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இப்படியான அரசியலை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அரசியல் ரீதியாக அவர்கள் தனிமைப்பட்டு போவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். மயிலாடுதுறை நாம் தமிழர் பொறுப்பாளர்கள் விமர்சனம் செய்ததாக கூறப்படும் ஜெயராமn என்பவர் மூத்த தமிழ்த்தேசிய தோழர் பேராசிரியர். இவர் தஞ்சை டெல்டா முழுவதும் அங்கே மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில் நின்று முன்னெடுத்து வருபவர். மேலும் எந்த ஊரில் எல்லாம் மீத்தேன் திட்டம் வருகிறது என்று சொல்கிறார்களோ அந்த ஊர்களுக்கு எல்லாம் சென்று மீத்தேனின் ஆபத்துக்களை அம்மக்களுக்கு சொல்லி,  போராட்டங்களை கட்டமைத்து,  அதற்காக பல்வேறு வழக்குகளை சந்தித்து,  சிறைக்கு சென்று இன்றைக்கும் அந்த அரசு அடக்குமுறையை எதிர்கொண்டு,  இந்த நிலத்தை காக்க போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios