சொல்லி அடிப்பதில் கில்லியாக இருக்கும் எடப்பாடியார்... அடுத்தடுத்து அறிவிப்புகளால் அரண்டுபோன ஸ்டாலின்...!
கிருபானந்த வாரியர் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிருபானந்த வாரியர் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், நேற்று வேலூர் மாவட்டத்தின் பல்வேறு புகுதிகளில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் விவசாயக் கடன் தள்ளுபடிக்கான ரசீது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவற்றில் குறிப்பாக மறைந்த புகழ்பெற்ற முருக பக்தரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான கிருபானந்த வாரியார் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் முதல்வர் அறிவித்தார். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முருகப் பெருமான் மீது அளவற்ற பற்றும் ,பக்தியும் கொண்டவராக அவர் விளங்கியதால் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அனைவராலும் அவர் அழைக்கப்பட்டார். ஏற்கனவே முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழாவிற்கும் பொது விடுமுறையை முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.