Asianet News TamilAsianet News Tamil

விசாரணை கைதி மர்ம மரணம்... குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரணும்... திருமாவளவன் வலியுறுத்தல்!!

திருவண்ணாமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் சிறையில் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித்த் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

thirumavalavan statement about mysterious death of trial prisoner at thiruvannamalai
Author
Tamilnadu, First Published Apr 29, 2022, 2:52 PM IST

திருவண்ணாமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் சிறையில் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித்த் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கடந்த 18 ஆம் தேதி உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

thirumavalavan statement about mysterious death of trial prisoner at thiruvannamalai

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித்த் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தட்டரணையைச் சார்ந்த தங்கமணி, நீதித்துறைக் காவலில் கிளைச் சிறையிலிருந்த சூழலில் பலியாகியுள்ளார். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனே உயிரிழந்திருக்கிறார். இது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில்  சென்னை விக்னேஷ் காவல்துறையின் விசாரணையில் பலியான துயரத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இந்த சாவு கவலையளிக்கிறது. தமிழக அரசு, இதனை சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை மற்றும் நீதித்துறை கட்டுப்பாட்டில் இத்தகைய சாவுகள் இனி நிகழாமல் தடுத்திட அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பலியான தங்கமணியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios