Asianet News TamilAsianet News Tamil

சிவலிங்கத்தை மனமுருக வணங்கி... மனுஸ்மிருதிக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்கிய திருமாவளவன்..!

சிவலிங்கத்தை வணங்கி ஆசிர்வாதம் பெற்று மனுஸ்மிருதியில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் கருத்துகள் பதிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களுடன் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கியுள்ளார் திருமாவளவன். 
 

Thirumavalavan started the campaign against Manusmriti
Author
Tamil nadu, First Published Nov 4, 2020, 11:00 AM IST

சிவலிங்கத்தை வணங்கி ஆசிர்வாதம் பெற்று மனுஸ்மிருதியில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் கருத்துகள் பதிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களுடன் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கியுள்ளார் திருமாவளவன்.

 Thirumavalavan started the campaign against Manusmriti

மனுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவான விதிகள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் கருத்தரங்கில் பேசியிருந்தார். மனுஸ்மிருதியில் கூறியிருப்பவற்றை குறிப்பிட்டு திருமாவளவன் பேசியதை அவரது சொந்த கருத்துகள் போல திரித்து பாஜகவினரும், சங்பரிவார அமைப்புகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து திருமாவளவன் மனுஸ்மிருதி குறித்து மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மனுஸ்மிருதியை சைவ மதமும் எதிர்த்ததாக அண்மையில் திருமாவளவன் பேசியிருந்தார்.மேலும், மனுஸ்மிருதியில் பெண்களை குறித்து இழிவாக இருக்கும் விதிகளை பற்றி பொதுமக்களிடமும், பெண்களிடமும் பரப்புரையை தொடங்கியுள்ளார் திருமாவளவன்.

Thirumavalavan started the campaign against Manusmriti

சைவத் தமிழ் பேரவையின் நிர்வாகி கலையரசி நடராஜன், திருமாவளவுனுக்கு அண்மையில் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கலையரசி நடராஜன் தலைமையில் தனது மனுஸ்மிருதி பிரச்சாரத்தை தொடங்கவிருந்த திருமாவளவன், விசிக நிர்வாகிகளுடன் ஆவடியில் உள்ள கலையரசி நடராஜன் நடத்தும் சிறிய சிவன் கோயிலுக்கு சென்றார்.

 

அங்கு சிவலிங்கத்தின் முன் அமர்ந்து லிங்கத்தை தொட்டுப்பார்த்த திருமாவளவன் அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் மனுஸ்மிருதியில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் கருத்துகள் பதிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களுடன் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலையரசி நடராஜன், “திருமாவளவன் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு முழுமனதுடன் ஆதரவு அளித்து அவர் வழியில் பயணிப்பேன்” என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios