திருமாவளவன் பேசியது சரியா? யார் சாதி வன்மத்துடன் பேசுகிறார்கள் என்று பாருங்கள் எனக் கூறி திருமாவளவன் பிற சாதியினரை வன்மையாக பேசிய வீடியோவை போட்டு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், கரூர் மாவட்ட எஸ்பி.யிடம் , அதிமுகவை சேர்ந்த சுசீலா சாமியப்பன் என்பவர் மீது திருமாவளவனை பற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சாதிய வன்மத்தின் காரணமாகவும், ஒருமையில் பேசி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்து இருந்தார். 

மேலும் அந்தப்புகாரில், சமூகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை திருமாவளவனும், கட்சித் தொண்டர்களும் பேணும் வகையில் செயல்பட்டு வரும் இந்த சூழலில் சுசீலா சாமியப்பனின் இந்த தான் தோன்றித்தனமான பதிவினால் சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் எங்கள் தொண்டர்களையும், சமூக மக்களின் உணர்ச்சிகளையும் தூண்டி அதனால் அவர் இட்கிடையாக நான் சார்ந்த்துள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்ற உணர்வை தூண்டி என்னையும், எனது கட்சித் தொண்டர்களையும் சமூக மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.

எனவே சுசீலா மாரியப்பன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நடவடிக்கையால் சுசீலா மாரியப்பன் தனது முகநூல் பதிவை நீக்கி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 


சுசீலா மாரியப்பன் பதிவு போட்டது தவறு என்றால் திருமாவளவன் பேசியது சரியா? யார் சாதி வன்மத்துடன் பேசுகிறார்கள் என்று பாருங்கள் எனக் கூறி திருமாவளவன் பிற சாதியினரை வன்மையாக பேசிய வீடியோவை போட்டு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், ’’நாலு மாவட்டங்களில் கட்சியை வைத்துக் கொண்டு நாடாளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மானம், வெட்கம் கெட்ட பிறவிகளே... இன்றைக்கு எது மானம் என்று சொல்லி தப்பித்துக் கொண்டிருக்கிறது என்றால் அது பொம்பளை சமாச்சாரம் தான். வேற ஒரு மயிரும் கிடையாது. அவனை திரும்பிப் பார்க்கவில்லை என்கிற பொறாமையும் கூட. அவன் சிவப்பா இருக்கான், அழகா இருக்கான்... ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து ஷூ போடுறான் சட்டை போடுறான். 

பல ஆயிரக்கணக்கான ரூபய் செண்ட் அடிக்கிறான். இவ்வளவும் அடிச்சே அவனை திரும்பிப் பார்க்கல. ஆனால், ஏழைக்குடும்பத்தில் பிறந்த கருப்பா இருக்கிற பள்ளனை சக்கிலியனை திரும்பி பார்க்கிறாள்னா அதுல இருந்து தெரிஞ்சிக்க உங்க லட்சணம் எவ்வளவு கேவலமா இருக்குனு. உங்க லட்சணம் என்னனு உங்க பொண்ணே சொல்றா.. இவ்வளவு இருந்தும் நீ ஒண்ணுக்கும் லாயக்கு இல்ல. உங்கிட்ட ஒரு சரக்கும் இல்ல. அவன் ஏழையா இருந்தாலும் வறுமையில இருந்தாலும் அவன்கிட்ட சரக்கும் மிடுக்கும் இருக்கு’’என திருமாவளவன் பேசிய பழைய வீடியோவை எடுத்துப்போட்டு பகிர்ந்து வருகின்றனர்.