இதை செய்தால் மோடி அரசை நாடாளுமன்றத்தில் இருந்து தூக்கி எறியலாம்... திருமாவளவன் பரபரப்பு கருத்து!!
மோடி தலைமையிலான அரசு கொடுங்கோல் அரசு என்பதற்கு பிபிசி அலுவலக சோதனை ஒரு சான்று என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.
மோடி தலைமையிலான அரசு கொடுங்கோல் அரசு என்பதற்கு பிபிசி அலுவலக சோதனை ஒரு சான்று என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொண்ட அரசு என்ற நன்மதிப்பைக் கொண்டிருக்கிறது. அதற்கு மக்கள் அளிக்கின்ற நற்சான்றிதழாக இந்த வெற்றி அமையும் வகையில் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிரிகளை அச்சுறுத்துவது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
இதையும் படிங்க: திமுக கவுன்சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்... கண்டனம் தெரிவித்து இன்று தமிழக பாஜக போராட்டம்!!
மோடி தலைமையிலான அரசு கொடுங்கோல் அரசு என்பதற்கு பிபிசி அலுவலக சோதனை ஒரு சான்று. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று தற்போது கூறுவதற்கு கால பொருத்தமும் இல்லை அரசியல் பொருத்தமும் இல்லை. இதில் இந்திய பாஜக அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் வேறு நோக்கத்தோடு சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு தலையிடுவதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பூரண மதுவிலக்குனு நாங்க எப்போ வாக்குறுதி கொடுத்தோம்? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு கருத்து!!
இந்திய அரசின் பின்னணியில் உள்ள இந்திய அரசு உளவுத்துறை இந்த அறிவிப்பின் பின்னணியில் இருந்து செயல்படுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. 10 ஆண்டுகளில் மோடியின் நண்பர் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் வந்துள்ளார். நாம் 10 ஆண்டுகள் உழைத்தாலும் மாற்றுத்துணி கூட வாங்க முடியவில்லை. 2024 ஆம் ஆண்டு திமுகவைபோல ஒரு கூட்டணி அமைந்தால் மோடி அரசை நாடாளுமன்றத்தில் இருந்து தூக்கி எறியலாம் என்று தெரிவித்துள்ளார்.